நான் ரொம்ப வருசமா ஒரு பைக் வாங்க ஆசைப்பட்டு, போன மாசம்தான் வாங்கினான். ஆனா அதுனால எனக்கு கிடைச்ச அனுபவம் ரொம்ப புதுசு.
எனக்கு BAJA BIKE (DISCOVER) ரொம்ப புடிக்கும். கோபில அதுதாங்க கோபிசெட்டிபளையம் போயீ கைல இருக்குற பணத்த கட்டி மீதிக்கு check leaf குடுத்து வாங்க என் தம்பீய குடிகிட்டு போனேன்.இதுல என்ன விசியம்னா நான் BIKE வாங்குற முடிவுல இருக்கிறத என் தம்பீ BAJA SHOWROOM க்கு ஒரு வாரம் முன்னாடியே சொல்லிடான்.
என்னை ராத்ரி பகல் எந்த நேரமும் செல்லுக்கு போன் பன்னீ கொன்னுடாங்க."அம்மா தாயீ சத்தியமா உங்க கிட்டதான் BIKE வாங்குரன்னுசொல்லித்தான்" போன் ஐ கட் பண்ண முடிங்க்சது.
சரி BIKE வாங்க போனா, பணத்த வாங்கி ஒரு CASH RECEIPT கொடுத்தாங்க. அப்புறம் தான் எனக்கு தலைவலி ஆரம்பம். AGREEMENT PAPER ஐ கைல கொடுத்து உங்க SIGN போடுங்கன்னு சொன்ன்னங்க. நானும் போடுறன், போடுறன் சும்மா கை வலிக்க ஒரு 75 SIGN போட்டன். அப்புறமா தான் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து," இதை எல்லாம் கொடுத்தாதான் FINANCE OK ஆகும்னு" சொன்ன்னங்க.
ஒரு வழியாக எல்லாமும் கொடுத்து என்னுடைய கனவு BIKE ஐ வாங்கிட்டு ஒரு பூஜை போட பாரியூர் கோவில் போயிட்டு வந்தான்.அடுத்த நாள் புது வண்டிய எடுத்க்கிட்டு எங்க ஏரியா பிகர் எல்லாம் வர்ற டைம் ல சும்மா ஒரு நாலு ரவுண்டு விட்டு BIKE ல OFFICE வந்துடன்.
ஆபீஸ் ல வண்டிய பத்தியா பீலா எல்லாம் முடிச்சுட்டு, சரி நம்ம வேலையை தொடங்கின உடனே அம்மா கிட்ட இருந்து ஒரு போன்"BAJA FINANCE ல இருந்து VERIFICATION பண்ண ஒருத்தர் வந்துருகிறார்" சொனாங்க."பார்த்து TEA, COFFEE எதாவது கொடுத்து அனுபுங்கனு" சொல்லி போன் ஐ வச்சுடன்.
வீடு போனதும் அம்மா கிட்ட நல்ல ஏத்து விழுது. ஏன்னா வந்தவன் என்னுடைய குளம், கோத்ரம்,பரம்பரை, சொத்து என எல்லாம் கேட்டு NOTE செய்திருக்கிறான்.
அடுத்த நாள் முதல் இன்று வரை நான் PHONE RING ஆனா நான் பயபட வேண்டி உள்ளது.ஒவ்ஒரு நாளும் ஒருத்தி போன் போட்டு அந்த "PERSONAL LOAN, HOUSE LOAN,COMPUTER LOAN இது எல்லாம் இருக்கு எதாவது ஒன்னு எடுத்துக்குங்க" அப்பிடின்னு கொல்றாங்க.
இதுல என்ன வேடிக்கை னா BIKE REGISTRATION பண்ண நான், பத்து நாள் செல் பில் எகிர்ற அளவு போன் செய்து தான். கடைசியா மனசு வந்து என் BIKE DOCUMENTS, RTO OFFICE வந்தது.FINE கட்டி தான் BIKE REGISTRATION முடித்தேன்.
இந்த இடைப்பட்ட நாட்கள்ல நான் BIKE எடுத்த SHOW ROOM ல யாரும் சரியா RESPONSE பண்ல. ஆனா கரெக்ட் டா ஒரு மாசம் ஆனதும் "BIKE SERVICE கொண்டுவாங்கனு" CALL வந்திச்சு.
நண்பா லோன் போட்டு BIKE வாங்கினா? சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரி.
Tuesday, 15 April 2008
சொந்த செலவில் சூனியம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
do not call registry-ல பதிஞ்சு வச்சாலும் தொடர்ந்து கூப்பிடுறாங்க .. ஒரு தடவை ஒருத்தர் கிட்ட சொன்னாலும் அதே வங்கியில இருந்து இன்னொருத்தர் கூப்பிடுறாங்க .. ஆரம்பத்துல அவுங்க வேலை இதுன்னு தோணினாலும் , ஒரு கட்டத்துல அவுங்களையே பதிலுக்கு கலாயக்க ஆரம்பிச்சதும் , அதுவும் சும்மா இல்ல அநியாயத்துக்கு ஒரு பொண்ணை நக்கல் பண்ணதும், அதே வங்கியில பத்து பசங்க வரிசையா கூப்டு வேறுபேத்தப்பாபங்க .. நாங்களும் விடாம நக்கல் அடிச்சு .. இப்போ ஒரு வழிய வர்றதில்ல .. இந்த நக்கல் தான் காரணமா னு தெரியாது ஆனா நல்லா கூத்தா இருந்தது .. ;-)
என்னுடைய BLOG ஐ படித்து கமெண்ட்ஸ் கொடுத்த முதல்க் நபர் நீங்கள் தான், ஆகவே மிக்க நன்றி. இது என்னுடைய முதல் படைப்பு.
ஒரு உண்மை தெருஞ்சு ஆகணும்.நீங்கள் எங்கிருந்து எனது BLOG ஐ கண்டு பிடித்தீர்கள்.
நான் தமிழ்மணம்,தேன்கூடு,சங்கமம் ஆகியவற்றில் என்னுடைய BLOG ஐ இணைக்க முயன்று சலிப்பு உட்றேன்.
கொஞ்சம் உதவி செய்து, என்னையும் தமிழ்மணம்,தேன்கூடு,சங்கமம் ஆகியவற்றில் இணைய உதவுங்கள்.
நன்றி எல்லாம் எதுக்குங்க .. தொடர்ந்து எழுதுங்க, யாரும் படிக்களையேய்னு பின்னூட்டங்கள் வர்றதை வச்சு முடிவு பண்ணிராதீங்க .. நிறைய பேர் பிடிச்சிருந்து படிப்பாங்க ஆனா பல்வேறு காரணங்களால பின்னூட்டம் போடாம இருக்கலாம் ..
எங்கிருந்து பார்த்தேன்-னு சரியா தெரியல.. ஆனா யாரோட வலைப்பூவிலோ நீங்க பின்னூட்டம் போட்டு தமிழ்மணம் பற்றி கேட்டுருந்தீங்க ..
சங்கமம் பற்றி தெரியல .. ஆனா தமிழ்மணம் , தேன்கூடு போன்றவற்றில் சேர்க்க அவர்கள் கொடுக்கும் ஒரு piece of code-ஐ உங்கள் வலைப்பூவில் சேர்க்க வேண்டும் .. ஏன் மின்னஞ்சல் முகவரி இது kolkataprince@gmail.com , ஒரு மடல் தட்டுங்கள் .. என்னால் முடிந்தவற்றை சொல்கிறேன் ..
Post a Comment